உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவந்திபுரத்தில் நாளை சீனுவாச திருக்கல்யாணம்

திருவந்திபுரத்தில் நாளை சீனுவாச திருக்கல்யாணம்

கடலுார்: கடலுார் திருவந்திபுரத்தில், திருப்பதி சீனுவாசன் திருக்கல்யாண உற்சவம் நாளை நடக்கிறது. திருப்பதி தேவஸ்தானம் ஆழ்வார் திவ்ய பிரபந்தம் செயல் திட்டம் சார்பில், ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 108 திவ்ய தேசங்களில் திருப்பதி சீனுவாசன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடலுார் திருவந்திபுரம் செங்கமலத்தாயார் திருமண மண்டபத்தில், நாளை (21ம் தேதி) மாலை 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை சீனுவாசன் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது. இரவு 9:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். திருப்பதியில் நடத்தப்படும் முறையில் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை உபயதாரர் கடலுார் ஜி.ஆர்.கே., எஸ்டேட்ஸ் உரிமையாளர்கள் துரைராஜ், கோமதி துரைராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர். இத்தகவலை, திருப்பதி தேவஸ்தான ஆழ்வார் திவ்ய பிரபந்தம் செயல் திட்டத்தின் செயல் திட்ட அதிகாரி சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !