கங்கையம்மனுக்கு விரைவில் கும்பாபிஷேகம்
ஆர்.கே.பேட்டை: கங்கையம்மன் மற்றும் நாகாலம்மன் கோவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, ராமாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது, கங்கையம்மன் மற்றும் நாகாலம்மன் கோவில்கள். கிராமத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள இந்த கோவில்களின் புனரமைப்பு பணிகள், ஆறுமாதங்களாக நடந்து வருகின்றன. இதற்கான பணிகளை கிராமவாசிகள் மேற்கொண்டு வருகின்றனர். மரத்தடியில் இருந்த கோவில்,விரிவுபடுத்தப்பட்டு கங்கையம்மன் கோவில் பிரதானமாகவும், அதன் பின்புறம் நாகாலம்மன் கோவிலும் கட்டப்பட்டு வருகின்றன. வரும் தை மாதத் திற்குள் புனரமைப்பு பணிகளை முடிக்கவும், அதே மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். தற்போது, இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்திற்காக, பக்தர்களிடம் இருந்து நன்கொடை எதிர்பார்க்கப்படுகிறது. நன்கொடையாக, 5,000 ரூபாய்க் கு மேல் வழங்குபவர்களின் பெயரை, கோவில் கல்வெட்டில் பொறிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.