உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2017-இந்தியாவில் என்ன நடக்கும்?

2017-இந்தியாவில் என்ன நடக்கும்?

*மக்கள் மத்தியில் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். கோவில்களில் அதிக வசதி செய்யப்படும்.
*ரூபாயின் மதிப்பு உயரும். மக்கள் வரிப்பணத்தை சரிவரச் செலுத்தி வளர்ச்சிக்குத் துணை நிற்பர். அரசு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறும்.
*கல்வித்தரம் உலக நாடுகளுக்கு இணையாக வளரும்.  பண்பாடு, கலாசாரத்தின் முக்கியத்துவம் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும்.
*ராணுவத்தை பலப்படுத்தும் விதத்தில் நவீன ஏவுகணை, போர் விமானங்கள் வாங்கப்படும். தீவிரவாதம் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும்.
*மழை வளத்தால் உணவு உற்பத்தி  பெருகும். உரம், பூச்சிகொல்லி மருந்து விலை குறையும். விளைச்சல் அதிகரிப்பால் விலைவாசி  குறையும்.
*அந்நிய நாடுகளின் முதலீடு அதிகரிக்கும். பயனுள்ள திட்டங்கள் அறிவிக்கப்படும். தொழில் வளர்ச்சி பெருகும்.
*தங்கம், வைரம், வெள்ளி, மனை, வீடு ஆகியவற்றின்  விலை குறையும். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை சற்று அதிகரிக்கும்.
*கடல் சீற்றத்தால் கடலோரப்பகுதிகளில் உயிர், பொருள் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.
*மத்திய அரசுடன் சுமூக உறவு இருக்கும். பொருளாதார வளர்ச்சியால் மக்கள் நலன் பாதுகாக்கப்படும்.
*முக்கிய தலைவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
*விவசாயம், தொழில் வளர்ச்சிக்கான கடன் தாராளமாக வழங்கப்படும்.
*மாணவிகள் கல்வி, விளையாட்டில் திறமையை வெளிப்படுத்துவர்.
*சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய நோய்கள் கட்டுப்படுத்தப்படும்.
*அதிகாரிகள் திறமையுடன் செயல்பட்டு மக்கள் மத்தியில் புகழ் பெறுவர்.
*பெண்களின் நிலை மேம்படும். சமூக சேவையில் அவர்கள்  முன்னிலை வகிப்பர்.
*படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முதியோர் நலன் குறித்த புதிய திட்டங்கள் அறிமுகமாகும்.
*இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !