உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதுகாப்பு அளிக்கும் ஆண்டவரின் ஆசிர்வாதம்!

பாதுகாப்பு அளிக்கும் ஆண்டவரின் ஆசிர்வாதம்!

அமெரிக்காவில் பெரிய கட்டடங்களை கட்டும் ஒருவர் இருந்தார். பெரிய கட்டடங்களை, எதிரிநாடுகள் யுத்த காலத்தில் குறிவைத்து தாக்குவது வழக்கம். குறிப்பாக, குண்டுவீசும் போது, அந்தக் கட்டடங்களில் வசிப்பவர்கள் உயிரிழக்கும் அபாயம் உண்டு. அவ்வாறு குண்டு வீசப்பட்டால், தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மறைவிடம் ஒன்றைக் கட்டினார். அணுகுண்டு வீசப்பட்டால் கூட, தாங்குமளவு அவரது தொழில் நுட்பம்
அமைந்தது.அந்தக் மறைவிடத்தை திறந்து வைத்து ஜெபிப்பதற்காக, மாரிஸ் செருல்லோ என்ற போதகரை அவர் அழைத்தார். போதகரிடம், ஐயா! இதுவரை யாரும் உபயோகித்திராத ரசாயன மூலப்பொருளைக் கொண்டு, இந்த மறைவிடத்தை உருவாக்கியுள்ளேன். இதற்காக ஏராளமான பணம் செலவானது. எத்தகைய குண்டுவீச்சையும் இந்த மறைவிடம் தாங்கும், என்று பெருமையாகச் சொன்னார்.

அதைக் கேட்ட போதகர், எனக்கும் கூட ஒரு பாதுகாப்பு மறைவிடம் இருக்கிறது. நீர் உமது மறைவிடத்தைக் கட்டுவதற்கு தயாரித்த மூலப்பொருட்களை விட அது மிகவும் உயர்ந்தது. விலையும் அதிகம். இதை விட அதிக பாதுகாப்பு அதில் உள்ளது, என்றார்.ஆச்சரியமடைந்த கட்டடநிபுணர், அப்படியா! அந்தப் பொருளின் பெயர் என்ன? எங்கே கிடைக்கும்? என்று ஆர்வமாகக் கேட்டார்.போதகர் சிரித்தபடியே, பைபிள் ஒன்றை
எடுத்தார். தன்னுடைய மறைவிடம் கற்களினால் அல்ல. இறகுகளால் ஆனது, என்ற சங்கீதம் அதிகாரம் 91:4 ஐ வாசித்துக் காட்டினார். அந்த வசனம் இதுதான். அவர் தமது சிறகுகளினாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய். அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்,.ஆம்....ரசாயனப்பொருட்கள் கொண்ட பாதுகாப்பறையில் இருந்தால் மட்டும் ஆபத்து நீங்கி விடுமா! ஒரு பூகம்பம் வந்தால், எல்லா கட்டடமும் இடிந்து போகுமே! ஆண்டவரின் அன்பும் ஆசியுமே நம்மை நிரந்தரமாகக் காக்கும் பாதுகாப்பு அறை. அந்த அறைக்குள் வாசம் செய்பவர்கள் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !