உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துன்பத்தில் இருந்து விடுபட ஆண்டவரை நம்புங்கள்!

துன்பத்தில் இருந்து விடுபட ஆண்டவரை நம்புங்கள்!

இரண்டாம் உலகப்போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த போது, லண்டன் நகரிலிருந்து குழந்தைகளை பத்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லும்படி அரசாங்கம் ஆணையிட்டது. அதன்படி, எல்லா குழந்தைகளும் சிறப்பு ரயில் ஒன்றில் ஏற்றப்பட்டார்கள். பெற்றவர்கள் பிள்ளைகளைப் பிரிய வேதனைப்பட்டார்கள். சிலர் பிரிவைத் தாளாமல் அழுதார்கள்.பிள்ளைகளைப் பிரிகிறோமே! மீண்டும் அவர்களைப் பார்ப்போமா! யுத்தத்தின் போக்கு எப்படியிருக்கும் என தெரியவில்லையே! இருப்போமா! இறப்போமா! என்று கண்கலங்கினார்கள். அப்போது ஒரு சிறுமி தன் தாயின் கண்களில் இருந்து வந்த கண்ணீரைத் துடைத்தாள்.அம்மா! நாங்கள் எங்கே போகிறோம் என்றோ, எப்போது திரும்புவோம் என்றோ தெரியாது. ஆனால், நம் ராணி எல்லாவற்றிற்கும்  பொறுப்பெடுத்திருக்கிறார். நாம் வெட்கப்பட்டு போவதேயில்லை, என்றாள்.அந்தச் சிறுமி சொன்ன வார்த்தை பெற்றவர்களை ஆறுதல்படுத்தியது.என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை, என்கிறது வேத வசனமான யோவே2:28. உண்மை தான்! ராணியை எப்படி குழந்தைகள் நம்பினரோ, அதேபோல் துõயவரான ஆண்டவரை நாம் நம்ப வேண்டும். அவர் நமக்கு அவமானமோ, துயரமோ வராமல் பாதுகாப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !