பரமக்குடி சிவன் கோயில்களில் காளபைரவ அஷ்டமி விழா
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் கோயில்களில் காளபைரவ அஷ்டமி விழா நடந்தது. தெய்வங்களுக்கு உகந்த மாதமான மார்கழியில், சிவ பெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அருளிய லீலை கொண்டாடப்படுவது வழக்கம்.
இதன் படி பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி கோயிலில் காலை 4 மணிக்கு சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. அப்போது மூஞ்சூரு வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் முருகன், வள்ளி, தெய்வானை முன் செல்ல, ஈஸ்வரன் பிரியாவிடையுடனும், விசாலாட்சி தனித்தேரில் ரிஷப வாகனத்தில் வீதியுலா சென்றனர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் காலையில் அபிஷேகம் நிறைவடைந்து, உற்சவர் புஷ்ப சப்பரத்தில் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர், நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.