உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் மாலை வேளையில் வாசலில் விளக்கேற்றுவதால் நற்பலன் உண்டாகுமா?

தினமும் மாலை வேளையில் வாசலில் விளக்கேற்றுவதால் நற்பலன் உண்டாகுமா?

நற்பலன் கிட்டும் என்பதால் தானே விளக்கேற்றச் சொல்லியிருக்கிறார்கள். சந்தேகம் இல்லாமல் இது போன்ற விஷயங்களைச் செய்து வாருங்கள்.  பகல் முழுவதும் சூரியஒளி கிடைக்கிறது. இரவு நேரம் வந்ததும் இருள் சூழ்ந்து விடுகிறது. இருள் அறியாமையைக் குறிப்பது. தவறுகளுக்குத் துணை  செய்வது. அறியாமையை ஒழிக்கவும், தவறு நீங்கவும் மாலையில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுகிறோம். மின்விளக்கு எரிகிறதே என்று நீங்கள் ÷ கட்கலாம். மின்சாரம் எப்போது போகும், விளக்கு எப்போது அணைந்து விடும் என்பது நமக்குத் தெரியாது. மகாலட்சுமி நம் இல்லம் தேடி வரும் நேரமான மாலையில் இருள் கவிய இருப்பது அபசகுனமாக இருக்கும். எனவே, மின்விளக்கு இருந்தாலும் அகல் விளக்கு ஏற்றி வழிபடுவதால்  மகாலட்சுமி நம் வீட்டிற்கு எழுந்தருளி அருள்புரிவாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !