வரதராஜர் கோவில் அருகே வளர்ச்சி பணிகள் நிறுத்தம்
ADDED :3318 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மதில் சுவர் அருகில் பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்ட பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளதற்கு கோவில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த வேலை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் முக்கிய வழிபாடு தலங்கள் அமைந்துள்ள, 12 நகரங்களை தேர்வு செய்து, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன் படி, கோவில் மதில் சுவரை ஒட்டி, இந்த திட்டத்திற்கான வேலைக்கு பள்ளம் தோண்டப்பட்டது. அதனால், மதில் சுவருக்கு பாதிப்பு ஏற்படலாம் என, அஞ்சிய கோவில் நிர்வாகம், எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த வேலை கிடப்பில் போடப்பட்டது.