கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :3255 days ago
ஆத்தூர்: ஆத்தூர், கைலாசநாதர் கோவிலில் நேற்று, தேய்பிறை அஷ்டமியொட்டி, பிரித்தியங்கிராதேவிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆத்தூர், வசிஷ்ட நதி தென்கரையில் உள்ள, கைலாசநாதர் கோவில் வளாகத்தில், பிரித்தியங்கிராதேவி அம்மன், சொர்ண பைரவர் சுவாமி சிலைகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமியொட்டி, பிரித்தியங்கிராதேவி கோவிலில், உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. பின், பிரித்தியங்கிரா தேவி அம்மன், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமானோர் வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், தேய்பிறை அஷ்டமியொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.