உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்ரபாதம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை எப்போது கேட்க வேண்டும்?

சுப்ரபாதம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை எப்போது கேட்க வேண்டும்?

சுப்ரபாதம் என்றால் இனிய காலைப் பொழுது. பொழுது புலரும் நேரத்தில் குயில், கோழி போன்றவை கூவும். இனிய தென்றல் வீசும். வேதியர்கள்  வேதம் ஓதுவார்கள். அடியவர்கள் துதிப்பாடல்களைப் பாடுவார்கள். இப்படிப்பட்ட இனிய சூழலில் இறைவன் பள்ளியறையிலிருந்து எழுந்தருளல்  வேண்டும் என்ற பொருள்படும் படியாக சுப்ரபாதம் அமைந்துள்ளது. இதை விடியற்காலையில் கேட்க வேண்டும். கந்தசஷ்டி கவசம் எப்போது வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !