உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் சிந்தனை - 9: தகுதிக்கு மீறி சிந்திக்காதீர்

கிறிஸ்துமஸ் சிந்தனை - 9: தகுதிக்கு மீறி சிந்திக்காதீர்

ஒரு சலவைத்தொழிலாளி நான்கைந்து கழுதைகளையும், அவை பொதி சுமந்து செல்லும் போது, ஒழுங்குபடுத்த ஒரு நாயையும் வளர்த்தார். அந்த நாய் மீது அவருக்கு பிரியம் அதிகம். நாயும் அவரை நக்கி விளையாடும். இதைப் பார்த்த கழுதைக்கு பொறாமை வந்து விட்டது. இந்த எஜமானுக்கு என்ன ஓரவஞ்சனை...நாம் இவ்வளவு பொதி சுமந்தும் நம்மிடம் என்றாவது கொஞ்சியிருக்கிறானா இவன் என்று எண்ணியது. தன் அன்பை தானே சென்று வெளிப்படுத்த எண்ணி, எஜமானன் மீது காலை துாக்கிப் போட்டு இஷ்டம் போல் விளையாடியது. அவரது உடல் புண்ணாகி விட்டது. கோபத்தில் கழுதையை உதைத்து தள்ளி விட்டார். அருகில் இருந்தவர்கள், கழுதைக்கு பைத்தியம் பிடித்து விட்டதாகக் கருதி, கட்டி வைத்து அடித்தனர். இப்போது கழுதையின் உடம்பெல்லாம் புண். “எதெது உண்மையோ, எதெது யோக்கியமோ, எதெது நியாயமோ, எதெது துாய்மையோ, எதெது அன்பிற்குரியதோ, எதெது நற்கீர்த்தியோ, எதெது பண்பொழுக்கமோ, எதெது போற்றுதலுக்குரியதோ அவற்றை சிந்தித்துக் கொண்டிருங்கள்,” என்கிறது பைபிள். தகுதிக்கு மீறிய செயல்கள் ஆபத்தைத் தரும் என்பதே இன்றைய சிந்தனை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !