மாமல்லபுரம் நாட்டிய விழா இன்று துவக்கம்?
ADDED :3255 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம் நாட்டிய விழா, இன்று மாலை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு பயணிகளின் ரசனைக்காகவும், நம் கலாசார விருப்பத்திற்காகவும், தமிழக சுற்றுலாத்துறை, டிசம்பர் மாத இறுதியில் துவங்கி, ஜனவரி மாதம் வரை, ஒரு மாதத்திற்கு, நாட்டிய விழா நடத்துகிறது. விழாவில், பரத நாட்டியம், குச்சிப்புடி உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். இந்த ஆண்டின் விழா, 20ம் தேதி துவக்க முடிவெடுக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவு, வர்தா புயல் தாக்கம் ஆகிய காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை துவக்க விழா, ஆடம்பரமின்றி துவக்கப்படுவதாக தெரிகிறது.