வெங்கடேச பெருமாள் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை
ADDED :3255 days ago
நகரி: பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று, புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சித்துார் மாவட்டம், வடமால்பேட்டை அடுத்த அப்பாலயகுண்டா பகுதியில், பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் நேற்று, கோவில் வளாகத்தில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் உட்பட திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வெங்கடேச பெருமாளை வழிபட்டனர்.