உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் சிந்தனை - 10: அன்பே உலகில் உயர்ந்தது

கிறிஸ்துமஸ் சிந்தனை - 10: அன்பே உலகில் உயர்ந்தது

நாளை கிறிஸ்துமசை கொண்டாடப் போகிறோம். இந்த இனிய வேளையில் நமக்குள் இருக்கும் குடும்பப்பகை, நண்பர்களுக்குள் ஏற்பட்ட பகை, அலுவலகத்தில் சக ஊழியர் செய்த கெடுதியினால் ஏற்பட்ட பகை...எதுவாயினும் விட்டுவிட்டு அவர்களிடம் அன்பு கொள்ள வேண்டும் என்ற உறுதி எடுங்கள்.ஒரு சிறுவன் பாம்பு தீண்டி இறந்து விட்டான். அவனது தந்தை பாம்பைத் தேடிப்பிடித்து கொன்று விட முடிவு செய்தார். ஒரு கோடரியுடன் பாம்புப் புற்றின் அருகே காத்திருந்தார். பாம்பு வெளியே வந்தது. கோடரியை வீசினார். குறிதவறி பாம்பின் வால் மட்டும் அறுபட்டது. தப்பி புற்றுக்குள் சென்று விட்டது. அடிபட்ட பாம்பு பழிவாங்கிவிடுமே என நினைத்த அந்த மனிதர், பாம்புடன் இனி சிநேகம் கொள்வதே நல்லதென நினைத்தார். புற்றின் முன்னால் பால் கிண்ணத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தார். பாம்பு வெளியே வந்தது. “மனிதனே! தீண்டுவது எனது இயல்பு. அதன்படியே உன் மகனைத் தீண்டினேன். ஒருவர் ஒரு தீங்கு செய்து விட்டார் என்பதற்காக, அவரைப் பழிவாங்கத் துடிப்பது தவறு. பகைவரிடமும் நேசம் கொள்,” என்றது. “நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம் பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது,” என்கிறது பைபிள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !