மேல்மலையனூர் கோவிலில் ரூ. 7.30 லட்சம் உண்டியல் வசூல்
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 7 லட்சத்து 30 ஆயிரத்தி 71 ரூபாய் உண்டியல் பணம் வசூல் ஆனது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை தின ஊஞ்சல் உற்சவம் முடிந்து, சில தினங்களில் உண்டியல்கள் திறக்கப்படுவது வழக்கம். தற்போது 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பின் னர், உண்டியல் திறந்து 15 தினங்களே ஆன நிலையில், நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலையில், கோவில் வளாகத்தில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. மொத்தம் 7 லட்சத்து 30ஆயிரத்து 71 ரூபாய் பணமும், தங்க நகைகள் 75 கிராம் மற்றும் வெள்ளி பொருட்கள் 67 கிராம் ஆகியவற்றை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதில், அறங்காவலர்கள் ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி,சேகர், ஆய்வாளர்கள்அன்பழகன், சரவணன்கண்காணிப்பாளர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலிலும் உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில் 32 ஆயிரத்து 674 ரூபாய் பணத்தை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.