உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா: வரும் 28ல் துவக்கம்

கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா: வரும் 28ல் துவக்கம்

சேலம்: கோட்டை பெருமாள் கோவிலில், வரும், 28ல் வைகுண்ட ஏகாதசி விழா துவங்குகிறது. சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, வரும், 28ல் சிறப்பு பூஜையுடன் துவங்குகிறது. 29ல், பகல் பத்து உற்சவம் துவங்கி, ஜன., 6 வரை, தினசரி காலையில் சிறப்பு அலங்காரம், மாலையில் அபிஷேக ஆராதனை நடைபெறும். 7ல், மோகினி அலங்கார சேவை, 8ல் வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் விஸ்வரூப தரிசனம், 9ல் திருமாள் சேவை, அன்னதானம் நடக்கிறது. தொடர்ந்து, 16ல் வேடுபரி உற்சவம், 17ல் ஆழ்வார் மோட்சம், 18ல் இயற்பா சாற்றுமுறை, சொர்க்கவாசல் திருக்காப்பு உற்வசம், 19ல் தேசிகர் சாத்துமுறை, 20ல் தனிக்கோல் தயார் அத்யேன உற்சவம் நடக்கிறது. தற்போது, பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !