உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால பூஜை

விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால பூஜை

சேலம்: விஷ்ணு துர்க்கை அம்மன் சன்னதியில், பெண்களால் நடத்தப்படும், ராகு கால பூஜை நடந்தது. சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மன் சன்னதியில், மார்கழி மாதத்தை முன்னிட்டு, விசேஷ ராகுகால பூஜை நேற்று நடந்தது. அதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள், துர்க்கை அம்மன் சம்பந்தப்பட்ட, 35 வகை பாடல்கள் பாடி, பூஜையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் சாத்தப்பட்டது. பின், மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இந்த பூஜையில் பங்கேற்றால், ராகு, கேது, காலசர்ப்ப தோஷம் நீங்கும், மகப்பேறு கிடைக்கும், விரைவில் திருமணம் கைகூடும் என, நம்புவதாக, பெண்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !