ஜெருசலேம் புனித பயணம் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
ADDED :3256 days ago
ராமநாதபுரம், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கு விண்ணப்பிக்க டிச.,30 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் நடராஜன் கூறியிருப்பதாவது: தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்காக தமிழக அரசு நபர் ஒருவருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் டிச.,16க்குள் விண்ணப்பிக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது, டிச.,30 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் புனித பயணம் மேற்கொள்ள விரும்புவோர் டிச.,30 மாலை 5:45 மணிக்குள் மேலாண்மை இயக்குனர், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், 807(5வது தளம்) அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.