பாரியூர் குண்டம் திருவிழாவை முன்னிட்டு சுங்கம் வசூலிக்கும் உரிமம் ரூ.37.55 லட்சத்துக்கு ஏலம்
கோபி: கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் தேர் திருவிழாவை முன்னிட்டு, தற்காலிக கடைகள் சுங்கம் வசூலிக்கும் உரிமம், 37.55 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஈரோடு மாவட்டம், கோபியில் இருந்து, அந்தியூர் செல்லும் சாலையில், 2 கிலோ மீட்டர் தொலைவில், பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில், குண்டம் தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு திருவிழா, வரும், 29ல், பூச்சாட்டுதலுடன் துவங்கு கிறது. 2017 ஜன., 9ல் சந்தன காப்பு அலங்காரம், 12ல் குண்டமிறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதையடுத்து ஜன.,13ல் தேரோட்டம், 14ல் மலர் பள்ளக்கு, 21ல் மறுபூஜை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கோவில் மைதானத்தில், வரும் ஜன., 9 முதல், 21 வரை மொத்தம், 13 நாட்களுக்கு, தற்காலிக கடைகள் நடத்துவோரிடம் சுங்கம் வசூலிக்கும் உரிமை ஏலம் விடப்பட்டது. கடந்தாண்டு திருவிழாவின் போது, சுங்கம் வசூலிக்கும் உரிமம், 35.55 லட்சத்துக்கு ஏலம்போனது. நேற்று நடந்த ஏலத்தில், 37.55 லட்சத்துக்கு, மொடச்சூரை சேர்ந்த குமார் என்பவர் ஏலம் எடுத்தார்.