போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :3254 days ago
போடி: போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஸ்ரீ தேவி, பூமி தேவியுடன் சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் கோலகமாக நடந்தது. போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம், சீர்வரிசை, மணமகன் வரவேற்பு, பாலும் பழம் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதனையொட்டி சிறப்பு அலங்காரம், ஊஞ்சல் சேவை, சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.சிறப்பு பூஜைகளை கார்த்திக் பட்டாச்சியர் குழுவினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் பாலகிருஷ்ணன், திருப்பாவை மற்றும் ஏகாதேசி குழுவினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருள் ஆசி பெற்றனர்.