உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராதா மாதவ விவாஹ மஹோத்ஸவ விழா

ராதா மாதவ விவாஹ மஹோத்ஸவ விழா

பவானி: பவானி, கூடுதுறை சாலையில் உள்ள ரோட்டரி ஹாலில், ராதா மாதவ விவாஹ மஹோத்ஸவ விழா, நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, 8:35 மணிக்கு, சம்பிரதாய உஞ்சவிருத்தியுடன் ராதா மாதவ விவாஹ மஹோத்ஸவம் தொடங்கியது. மாங்கல்ய தாரணம், தீபாராதனையுடன் முடிந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சென்னை, ஸ்ரீகாந்த் பாகவதர் குழுவினர் பக்தி சொற்பொழிவு நடந்தது. மாலை, 6:00 மணியளவில், ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா முடிந்தது. விழாவில், பவானி யுவஜன பக்த பஜனை சபா பக்தர்கள் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !