கீழக்கோட்டை ஐயப்பன் மணிமண்டபத்தில் மண்டல பூஜை
ADDED :3255 days ago
சின்னாளபட்டி;கீழக்கோட்டை சித்திவிநாயகர் கோயில் ஐயப்பன் மணிமண்டபத்தில், மண்டல பூஜை நடந்தது.கீழக்கோட்டை மாரியம்மன் கோயில் அருகே சித்திவிநாயகர் கோயில் ஐயப்பன் மணிமண்டபம் உள்ளது. ஆண்டுதோறும் சபரிமலை பக்தர்கள் சார்பில் மண்டல பூஜை நடத்தப்படுகிறது. நேற்று, ஐயப்பன் மணிமண்டபத்தில், உலக நலன் வேண்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. ஐயப்பனுக்கு மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.ஏராளமான பெண்கள், திருவிளக்கு வழிபாடு செய்தனர். பின்னர், 18 படிகளும் அலங்கரிக்கப்பட்டு, படி பூஜை நடந்தது. மகா தீபாராதனையுடன், அன்னதானம் நடந்தது. சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.