உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோவில் கும்பாபிஷேகம்: குளங்களை தூர் வார பக்தர்கள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை கோவில் கும்பாபிஷேகம்: குளங்களை தூர் வார பக்தர்கள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள குளங்களை தூர் வார வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 2002ல் நடந்தது. இதையடுத்து, வரும் பிப்., 6ல் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, 27 கோடி ரூபாய் மதிப்பில் கோவிலில் பல்வேறு பணிகள் நடந்து முடிந்துள்ளன. கும்பாபிஷேகத்தில் சுவாமிக்கு, 32 யாக குண்டமும், அம்மனுக்கு, 25 யாக குண்டமும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், கோவிலில் எப்போது கும்பாபிஷேகம் நடத்தினாலும், கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளம், பிரம்ம தீர்த்த குளம் தூர்வாரப்படுவது வழக்கம். ஆனால், தற்போது குளங்கள் தூர்வாரப்படாமலேயே பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. எனவே, குளங்களை தூர் வார கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !