உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை

பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வெங்கடேசா காலனி ஐயப்ப சுவாமி கோவிலில், மண்டல பூஜை திருவிழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி வெங்கடேசா காலனி ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன் கோவிலில், மண்டல பூஜை திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை 4:00 மணிக்கு திருமதுர பூஜை, மகா கணபதி ேஹாமம், ஐயப்ப சுவாமிக்கு அபிேஷகம், 6:00 மணிக்கு மஞ்சள் அம்மனுக்கு பூஜையும் நடந்தது. காலை, 10:30 மணிக்கு மண்டல பூஜை, மஞ்சள் அம்மனுக்கு தீபாராதனை, ஐயப்ப சுவாமிக்கு தீபாராதனை, 11:30 மணி மகேஸ்வர பூஜை, 11:45 மணி அன்னதானம் உள்ளிட்ட பூஜைகளும் நடந்தது. பின், மாலை 6:00 மணிக்கு மண்டல பூஜை, 6:30 மணி பஞ்ச வாத்தியத்துடன் புஷ்ப அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.  ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன் கோவில், மண்டல பூஜை திருவிழாவையொட்டி, ஐயப்ப சேவா சங்கம், ஐயப்பா சேவா அணி சார்பில், தெய்வீக நடன நிகழ்ச்சி, பக்தி இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !