பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :3417 days ago
பழநி: பழநி பெரியாவுடையார் கோயிலில் மாலை 4.30 மணிக்கு நந்திபகவான், மூலவருக்கும் பிரதோஷ வேளையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவன் பார்வதி ரிஷப வாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். இடும்பன்கோயிலில் சிவகிரிநாதர், உமாமகேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி திருவுலா நடந்தது. மேலும், சன்னதிவீதி வேளீஸ்வரர்கோயில், மலைக்கோயில் கைலாசநாதர் சன்னதி, திருஆவினன்குடிகோயில், புதுநகர் சிவன்கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.