சமத்துவம் பேசும் திருவடிபூங்கோவில் கல்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், தேசுமுகிபேட்டை கிரிவலப்பாதையில், திருவடிபூங்கோவில் மண்டபம் உள்ளது. அதன் அருகில், மக்கள் அமர்ந்து ஓய்வெடுப்பதற்காக, 30க்கும் மேற்பட்ட கல் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கழுக்குன்றத்திற்கு வரும் அரசு மற்றும் தனியார் நிறுவனம் சார்ந்த ஊழியர்கள், கிரிவலம் செல்வோர், அப்பகுதியில் வசிப்போர் உள்ளிட்ட ஏராளமானோர், திருவடிபூங்கோவில் மண்டபம் பகுதிக்கு வருவர்.
மக்கள் ஒன்று கூடல்: வெளியூர் பகுதிகளிலிருந்து வருவோர், கொண்டு வரும் உணவை, அங்கு அமர்ந்து சாப்பிட்டு, தங்கள் பயணத்தை மீண்டும் துவக்குகின்றனர். உறங்குவதற்கும், ஒன்றாக கூடி பேசுவதற்கும் ஏற்ற வகையில் இருப்பதால், அனைத்த தரப்பு மக்களும், இந்த இடத்தை முக்கிய சந்திப்பு பகுதியாக பயன்படுத்துகின்றனர்.
விடுமுறை நாட்கள்: இந்த இடம் இயற்கையான மரங்களால் சூழப்பட்டிருப்பதாலும், மலையின் ஓரத்தில் அமைந்திருப்பதாலும் எப்போதுமே இயற்கை காற்றுடன் குளுமையாக உள்ளது. மேலும், விடுமுறை நாட்களில், இப்பகுதி பிள்ளைகளுக்கு, பயிற்சி வகுப்புகளும் நடக்கின்றன. ஒரு முறை இந்த இடத்திற்கு வந்தவர்கள், அடுத்து முறை வராமல் இருப்பதில்லை.