வீரப்பம்பாளையம் மாரியம்மன் கோவிலில் இன்று பூச்சாட்டுதல்
ADDED :3255 days ago
ஈரோடு: வீரப்பம்பாளையம் மாரியம்மன் கோவிலில், இன்று பூச்சாட்டுதல் நடக்கிறது. ஈரோடு வீரப்பம்பாளையம், மாரியம்மன் கோவிலில், மார்கழி மாதம் தோறும் திருவிழா நடக்கிறது. நடப்பாண்டு விழா, இன்று காலை, 6:00 மணிக்கு துவங்குகிறது. இரவு, 8:00 மணிக்கு பூச்சாட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து, 29ல் கம்பம் நடுதல், ஜன.,3ல் காவிரிக்கு சென்று தீர்த்தம் கொண்டு வருதல், பொங்கல் வைபவம் நடக்கிறது. ஜன.,4ல் மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 6ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.