ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை
ADDED :3255 days ago
தேவதானப்பட்டி;பெரியகுளம் தாலுகா, கோயில்புரம், குள்ளப்புரம், சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி,ஜெயமங்கலம் கிராம ஐயப்ப பக்தர்கள் மற்றும் வரதராஜ்நகர் பத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகம் இணைந்து மண்டல பூஜை நடந்தது. ராஜ்ஸ்ரீ நகர் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து பெண்கள் விளக்கு ஏந்தி, ஐயப்பன் படத்துடன் ஊர்வலம் நடந்தது. பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் தற்காலிக ஐயப்பன் கோயில் செய்து சிறப்பு பூஜை, பஜனை நடந்தது. அர்ச்சகர் நந்தகுமார், சர்க்கரை ஆலை பொது மேலாளர் சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.