பெரியப்பட்டில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED :3255 days ago
புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவிலில் 28 ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. விழாவையொட்டி 28 ம் தேதி காலை 6.00 மணிக்கு பாலாபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடக்கிறது. மதியம் 2.00 மணிக்கு மஞ்சள்பொடி, திரவியபொடி, துளசிபொடி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, இரவு 7.00 மணிக்கு அனுமன் வெண்ணைக்காப்பில் அலங்கரிக்கப்பட்டு, வடைமாலை, துளசிமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்கின்றனர்.