உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: 54,000 வடை மாலை அலங்காரத்தில் சுவாமி!

நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: 54,000 வடை மாலை அலங்காரத்தில் சுவாமி!

நாமக்கல்: ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி 54,000 வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், மார்கழி அமாவாசையில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா, இன்று (டிச 28ல்) கொண்டாடப்பட்டுவருகிறது. விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின், நாமக்கல் மற்றும் கரூர் பக்தர்கள் சார்பில், 54 ஆயிரம் வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.  பக்தர்களுக்கு பிரசாதமாக வடை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !