உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் கோயில் மார்கழி உற்சவம் : நாளை பிறந்த வீட்டிற்கு எழுந்தருளல்

ஆண்டாள் கோயில் மார்கழி உற்சவம் : நாளை பிறந்த வீட்டிற்கு எழுந்தருளல்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நாளை (டிச.29 ) முதல் பகல்பத்து, ராப்பத்து மற்றும் எண்ணெய் காப்பு உற்சவம் துவங்குவதை முன்னிட்டு, மாலையில் பிறந்த வீட்டிற்கு ஆண்டாள் எழுந்தருள்கிறார். பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான நாளை மாலை 4:35 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் கோபால விலாசத்தில் எழுந்தருள்கிறார்கள். 5:00 மணிக்கு ஆண்டாள் அவதரித்த இல்லமான வேதபிரான்பட்டர் திருமாளிகைக்கு வருகை தந்து, பச்சை பரத்தல் நிகழ்ச்சியில் ஆண்டாள்,ரெங்கமன்னார் பங்கேற்கின்றனர். இதையடுத்து வடபத்ரசயனர் சன்னதி திருவோண மண்டபத்தில் ஜனவரி 7 வரை பகல்பத்து உற்சவம் நடக்கிறது.

பரமபதவாசல் திறப்பு :
ஜனவரி 8 காலை பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடப்பதை யொட்டி அன்று காலை 4:00 மணிக்கு பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, 6:30 மணிக்கு பரமபதவாசல் வழியாக எழுந்தருள்கின்றனர். அப்போது ஆண்டாள்,ரெங்கமன்னாரை ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவிக்க, மாடவீதிகள் வழியாக ராப்பத்து மண்டபத்திற்கு வந்தடைகின்றனர். ஜனவரி 18 வரை ராப்பத்து உற்சவம் நடக்கிறது.

எண்ணெய்காப்பு உற்சவம் : ஜனவரி 7 முதல் 14 வரை மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம், திருமுக்குளம் எண்ணெய்காப்பு மண்டபத்தில் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !