உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழக கவர்னர் தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழக கவர்னர் தரிசனம்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், தனது குடும்பத்தினருடன் நேற்று தரிசனம் செய்தார். கோயிலுக்கு நேற்று மாலை 6:05 மணிக்கு வந்த கவர்னர், மனைவி வினோதா, மகன், மகள், மருமகள், மகனின் மாமியார் ஆகியோரை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பொற்றாமரைக்குளம், அம்மன் சன்னதி, முக்குறுணி விநாயகர், சுவாமி சன்னதி, கொடி மரம் ஆகியவற்றில் தரிசனம் செய்தனர். ஒரு மணி நேர தரிசனத்துக்கு பின் இரவு 7:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். கலெக்டர் வீரராகவராவ், டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, மேற்கு தாசில்தார் சிவபாலன், பி.ஆர்.ஓ., செந்தில்அண்ணா உடனிருந்தனர். தக்கார் கூறும்போது, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முதல் முறையாக 1972ம் ஆண்டு கவர்னர் வந்ததாக கூறினார். தற்போது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், சிலைகளை கண்டு தானும், குடும்பத்தாரும் ரசித்து மகிழ்ந்ததாகவும் தெரிவித்தார், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !