உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் ஜன.,11ல் ஆருத்ரா தரிசனம்

ராமேஸ்வரம் கோயிலில் ஜன.,11ல் ஆருத்ரா தரிசனம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோல் சபாபதி சன்னதியில் ஜன.,11ல் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இதுகுறித்து இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது:ஜன.,11 அதிகாøல் 2:30 மணிக்கு ராமேஸ்வரம் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு 3:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். தொடர்ந்து கோயிலில் இருந்து பல்லக்கில் மாணிக்கவாசகர் புறப்பாடாகி மூன்றாம் பிரகாரத்தில் வலம் வருகிறார். 5:15 மணிக்கு கோயிலுக்குள் உள்ள சபாபதி சன்னதி முன்பு எழுந்தருளியதும் ஆருத்ரா தரிசனம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. அன்று இரவு கோயில் ரதவீதியில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !