உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயில் செல்லும் ரோப்காருக்கு புதுபெட்டிகள்

பழநி மலைக்கோயில் செல்லும் ரோப்காருக்கு புதுபெட்டிகள்

பழநி : பழநி மலைக்கோயில் செல்லும் ரோப் காருக்கு கரூர் மாவட்டத்தில் இருந்து எட்டு புதிய பெட்டிகள் வந்துள்ளன. பழநி மலைக்கோயிலுக்கு மூன்று நிமிடங்களில் எளிதாக சென்று வரும் வகையில் நாள்தோறும் ரோப்கார் இயக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும். மாதந்திர பராமரிப்பு பணிகளுக்காக மாதத்தில் ஒருநாளும், ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக ஒருமாதமும் நிறுத்தப்படுகிறது. அதன்படி நேற்று மாதாந்திர பணிகளுக்காக நிறுத்தப்பட்டு உருளைகள், கம்பி வடத்தில் கிரீஸ், ஆயில் இடும்பணி நடந்தது. கரூர் மாவட்டத்தில் இருந்து வந்துள்ள 8 புதிய பெட்டிகள் கம்பிவடத்தில் பொருத்தப்பட்டன. பின் குறிப்பிட்ட அளவு எடைக்கற்களை வைத்து, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதன் மூலம் பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து இன்றுமுதல் பக்தர்கள் பயன்பாட்டுக்கு ரோப்கார் இயக்கப்படும் என, கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !