உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந்ஜெயந்தி விழா கோலாகலம்!

கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந்ஜெயந்தி விழா கோலாகலம்!

திருச்சி: திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில், அனுமந்ஜெயந்தி விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை, 1,00,008 ஜாங்கிரி மாலையால் அலங்கரம் செய்ப்பட்டு, ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருச்சி கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 28ம் தேதியான இன்று அனுமந்ஜெயந்தி விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, 1,00,008 வடமாலை மற்றும் 1,00,008 ஜாங்கிரி மாலை சாற்றுதல் மற்றும் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. அதிகாலை, 5.30 மணிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை, காலை, 7 மணிக்கு வடமாலை மற்றும் ஜாங்கிரி மாலை சாற்றுதல் நடைபெற்றது. காலை. 9 மணி முதல், மதியம், 1 மணி வரையும், மாலை, 4.30 மணி முதல், இரவு, 8 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை நடைபெறும். விழாவை முன்னிட்டு, காலை, 9 மணி முதல் பிரசாதமும், சிறப்பு அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !