வாடிப்பட்டி பொன்பெருமாள் மலையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
ADDED :3255 days ago
மதுரை : மதுரை வாடிப்பட்டி பொன்பெருமாள் மலையில் உள்ள ஸ்ரீஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (டிச.,28) மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. வாரம் தோறும் சனிக்கிழமை காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி, மாலை 4:30 முதல் இரவு 7:00 மணி வரையிலும், இதர நாட்களில் மாலை 4:30 முதல் இரவு 7:50 மணி வரை நடை திறந்திருக்கும். அனுமன் ஜெயந்தி, ஸ்ரீராமநவமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இக்கோயில் மலை அடிவாரத்தில் இருந்து மேலே 562 படிகள் உள்ளன. திருப்பணிகளை திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.