கம்பளி சுவாமி மடத்தில் ஆராதனை விழா
ADDED :3255 days ago
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில், யோக மகரிஷி டாக்டர் சுவாமி கீதானந்த கிரி குரு மகராஜ் 23வது ஆராதனை விழா நாளை (29ம் தேதி) நடக்கிறது. தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில், கம்பளி ஞான தேசிக சுவாமிகளின் 143வது ஆராதனை விழா மற்றும் யோக மகரிஷி டாக்டர் சுவாமி கீதானந்த கிரி குரு மகராஜ் 23வது ஆராதனை விழா நாளை நடக்கிறது. இதனையொட்டி, காலை 6.05 மணிக்கு கம்பளி சுவாமி மடத்தில் கொடியுடன் வலம் வருதல் மற்றும் கொடி ஏற்றம் நடக்கிறது. 7.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், 11.30 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. இதனை தொடர்ந்து, மதியம் 12.15 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.