அழகு திருமலைராயப்பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
பொள்ளாச்சி: அர்த்தநாரிபாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகு திருமலைராயப்பெருமாள் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், மாலை 6:00 மணிக்கு ஆச்சார்யர்கள் தீட்சை பெறுபவர்களுடன் நேர்காணல், இரவு 8:00 மணிக்கு உருமி கும்மியாட்டம் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, காலை, 8:30 மணிக்கு யாக பூஜை, காலை 9:00 மணிக்கு அபிேஷகம், காலை 9:30 மணிக்கு அலங்காரம், காலை 10:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல், பகல் 11:00 மணிக்கு ஆசியுரை மற்றும் சொற்பொழிவு, மதியம் 2:00 மணி முதல் கலை நிகழ்ச்சி, மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை அக்னி ேஹாத்ர தீட்சை வழங்கும் விழா நடக்கிறது. காலை 8:00 மணி முதல் அன்னதானம் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, தீட்சை வழங்கும் விழாவும் நடக்கிறது.
* பொள்ளாச்சி அனுப்பர்பாளையம் ஸ்ரீ பூமிநீளா சமேத மலை தாண்டி பெருமாள் கோவிலில், இன்று அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. விழாவையொட்டி, காலை 9:15 மணிக்கு பூமிநீளா சமேத மலைதாண்டிய பெருமாளுக்கு அபிேஷகங்களும், அலங்கார பூஜைகளும் நடக்கிறது. காலை 9:30 மணிக்கு சுயம்பு வீர ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிேஷகங்களும், ஆராதனையும்; காலை 9:45 மணிக்கு மலைதாண்டிய பெருமானின் உலகளந்த திருவடி பாதத்திற்கு சிறப்பு அபிேஷக பூஜையும் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப் படுகிறது.