உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி மலைக்கோவில் நிழற்குடை சீரமைப்பு

திருத்தணி மலைக்கோவில் நிழற்குடை சீரமைப்பு

திருத்தணி : நமது நாளிதழில் வெளியான செய்தியால் முருகன் மலைக்கோவிலில் புயலால் சேதமடைந்த நிழற்குடையின் தகடுகள் சீரமைக்கப்பட்டன.திருத்தணி, முருகன் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்து கோவிலுக்கு நுழைவாயில் செல்லும் வரை கோவில் நிர்வாகம் நிழற்குடை அமைத்து இருந்தனர். இந்நிலையில், கடந்த, 12ம் தேதி வீசிய வர்தா புயலால் மலைக்கோவிலில் நிழற்குடையின் மேற்கூரை தகடுகள் பெயர்ந்து சேதம் அடைந்தன. இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, கோவில் நிர்வாகம், சேதம் அடைந்த நிழற்குடையின் மேற்கூரைகளின் தகடுகளை அகற்றி, புதியதாக தகடுகள் பொருத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !