உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு

சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு,மூலவர் பெருமாள் ஆண்டாள் ரங்கமன்னார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு நேற்று அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு, உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்திலும், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு,ஆஞ்சநேய சுவாமி சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று (29ம் தேதி) முதல், அத்யன மகோற்சவம் திருமொழித்திருநாள் உற்சவத்தில் துவங்கி, திருவாய் மொழித்திருநாள், வரும் ஜனவரி 17ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !