உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழிபாடு

திருமலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழிபாடு

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தன் குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார்.

தரிசனம் : திருப்பதி - திருமலை ஏழுமலையானை வழிபட, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று மதியம் திருமலைக்கு வந்தார். அவரை, தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடு செய்தனர். கொடி மரத்தை வணங்கியபடி சென்று, ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் வேத ஆசீர்வாதம், சிறப்பு பிரசாதம், 2017-ஆம் ஆண்டின் நாள்காட்டி, டைரி ஆகியவற்றை வழங்கினர்.

வேண்டுதல்: இதன் பின், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறுகையில், ஏழுமலையான் தரிசனம், மனதிற்கு நிம்மதி அளித்தது. பிறக்கவிருக்கும் புத்தாண்டு, அனைவருக்கும் சிறப்பானதாக அமைய ஏழுமலையானிடம் வேண்டினேன், என்றார்.

பலத்த பாதுகாப்பு: ஜனாதிபதியின் வருகையை ஒட்டி திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மலைப்பாதையில் செல்ல நேற்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை பக்தர்கள் மற்றும் இதர வாகனங்களுக்கு தேவஸ்தானம் தடை விதித்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !