உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்

சேலம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்

சேலம்: சேலம் மாவட்டத்தில், அனுமன் ஜெயந்தி விழா, நேற்று, கோலாகலமாக நடந்தது. சேலம், கோட்டை பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு, அதிகாலை பூஜை, 6:00 மணிக்கு நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வெண்ணெய் காப்பு அலங்காரம் சாத்தப்பட்டது. 1:00 மணியளவில், வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தப்பட்டு, ராஜஅலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சிவபக்த ஆஞ்சநேயருக்கு, 16 வகை அபிஷேகம் நடந்து, வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. சேலம், எஸ்.பி., அலுவலகம் எதிரே, கருடபெருமாள் சரணாலயத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று காலை, 6:00 மணியளவில், விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம் முடிந்து, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், கம்பீர தோற்றத்தில், வீர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், ஓமலூர் கிழக்கு சரபங்கா நதி, மேற்கு கரை, வீர ஆஞ்சநேயர், காடையாம்பட்டி காரியசித்தி வீர ஆஞ்சநேயர், ஆத்தூர், கம்பர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர், ஆத்தூர், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள், பழைய பேட்டை ஆஞ்சநேயர், வி.கூட்ரோடு ஆஞ்சநேயர், விநாயகபுரம் ரங்கநாதர், வாழப்பாடி சென்றாய பெருமாள், சங்ககிரி வல்லபராஜ பெருமாள், சந்தைப்பேட்டையில் நவ ஆஞ்சநேயர், பஞ்சாயத்து அலுவலக சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயர், ஒருக்காமலை மேற்கு மலையடிவாரத்தில் அன்னதான ஆஞ்சநேயர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

மேலும், இடைப்பாடி, வீரப்பம்பாளையத்தில் உள்ள வெள்ளகரட்டு திம்மராய பெருமாள், ஆட்டையாம்பட்டி அருகே, காளிப்பட்டி சென்றாயபெருமாள், பெத்தநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திலுள்ள ஆஞ்சநேயர், ஏத்தாப்பூர் பெருமாள், கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி லட்சுமி நாராயண பெருமாள், வாழப்பாடி சென்றாய பெருமாள், மல்லூர் கோட்டை மேடு கோவிந்தராஜா பெருமாள், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வீரஆஞ்சநேயர், தாசநாயக்கன்பட்டி வரதராஜபெருமாள், நத்தமேடு சென்னகேசவ சென்றாயபெருமாள், தண்ணீர் தொட்டி பக்த அனுமன் உள்ளிட்ட கோவில்களில், அனுமன் ஜெயந்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !