உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வராஹி அம்மனுக்கு பித்தளை கவசம்

வராஹி அம்மனுக்கு பித்தளை கவசம்

நெத்திமேடு: சேலம், நெத்திமேடு காளியம்மன் கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு, பித்தளை கவசம், புதிதாக சாத்துப்படி செய்யப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை, 8:15 மணியளவில், விக்னேஷ்வர பூஜை, புண்ணிய யாகானம், மகா கணபதி ஹோமம் செய்த பின், வராஹி அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, பித்தளை கவசம் சாத்துப்படி செய்து, சிறப்பு அலங்காரத்தில், அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் காளியம்மன், துர்க்கை தாயாரும், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். நிறைவாக, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பித்தளை கவசத்தை, பெண் பக்தை ஒருவர், காணிக்கையாக செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !