உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி கோயில்களில் அனுமன் ஜெயந்தி

தேனி கோயில்களில் அனுமன் ஜெயந்தி

தேனி: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தேனி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் அனுமனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல் வடை மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்துார் கதலிநரசிங்கப்பெருமாள் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. விஸ்வத் சேனர் பூஜையுடன் துவங்கிய விழாவில் ஆஞ்சநேயர் மூல மந்திர ஹோமம், சுதர்தன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. பால்,தயிர், பன்னீர், சந்தனம் உட்பட 11 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. துளசி மாலை, வடை மாலை அணிவித்து பூஜைகள் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயரை பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் வழிபட்டனர்.

பெரியகுளம்: பெரியகுளம் பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன்ஜெயந்தியை முன்னிட்டு, ஆஞ்சநேயர் வெண்ணெய்காப்பு மற்றும் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளித் தார். பக்தர்களுக்கு வடை பிரசாதம் வழங்கப்பட்டது. வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

* தாமரைக்குளம் மலைமேல் பெருமாள் கோயிலில், ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. * லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில் ஆஞ்சிநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !