போடி ஐயப்பன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :3253 days ago
போடி: போடி ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு விளக்கு பூஜை ஐயப்ப பக்தசபை தலைவர் முனியாண்டி தலைமையில் நடந்தது. சபை குருநாதர் பரமதாஸ், செயலாளர் விவேகானந்தன், பொருளாளர் ஆறுமுகம், அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொருளாளர் முருகன், துணை செயலாளர் மாரிமுத்து, இணை செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். ஏராளமான பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். சுவாமி அலங்காரத்தை பட்டாச்சாரியார் கமலகண்ணன் செய்தார்.