சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
ADDED :3253 days ago
சோழவந்தான், சோழவந்தான் ஐயப்பன் சுவாமி கோயில் மார்கழி உற்சவத்தில் நடந்த மண்டல பூஜையில் சுவாமி புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளினார். ஏற்பாடுகளை சபரிசாஸ்தா ஐயப்ப பக்தர்கள் நலசங்க நிர்வாகி கருவீரபத்திரன், நிர்வாகிகள் தனசேகரன், சேகரன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். தென்கரை சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் நடந்த மண்டல பூஜையில் சுவாமி புலி வாகனத்தில் எழுந்தருளினார்.