உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கப்பணி: குழுவினர் ஆய்வு

திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கப்பணி: குழுவினர் ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல பாதை விரிவுபடுத்தும் பணியை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்தனர்.திருவண்ணாமலை கிரிவல பாதையில், சாலை விரிவாக்க பணியில், மரங்கள் வெட்டப்படுவதாக வந்த புகாரை அடுத்து, பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து, பணியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது. பின், இது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்க உத்தரவிட்டது. அதன்படி, ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, சம்பத்குமார் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இரண்டு முறை ஆய்வு செய்தது. இதன் அடிப்படையில், கடந்த நவ., 8ல், பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சாலை விரிவாக்கப் பணி முதற்கட்டமாக துவங்கியது. இந்நிலையில், அடுத்த கட்ட விரிவாக்கப் பணி செய்வது குறித்து, அந்த குழுவினர், நேற்று முன் தினம் மாலை ஆய்வு செய்தனர். இந்த அறிக்கையை, ஜன., 6ல் பசுமை தீர்ப்பாயத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !