காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் நேற்று, பகல் பத்து உற்சவம் துவங்கியது. ஆழ்வார்கள் மூலர் சன்னிதி முன் எழுந்தருளினர். வைகுண்டஏகாதேசி அன்று ராபத்து துவங்க இருக்கிறது. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம், பகல் பத்து மற்றும் ராபத்து உற்சவம் நடைபெறும். பகல் பத்து உற்சவத்தில் போது, நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், பெரியாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பணாழ்வார், பேய்யாழ்வார், மற்றும் ஆச்சாரியர்கள் நாதமுனிகள் மணவாளமாமுனிகள், துாப்புல் தேசிகன், ராமானுஜர், திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வார் போன்ற உற்சவர் வரதராஜப்பெருமாள் மூலவர் சன்னிதிமுன் எழுந்தருளினர். பிரபந்த கோஷ்டிகள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல்கள் பாடுவர். தினமும் ஆழ்வார்கள் பெருமாள் முன் அமர்ந்து பாடுவது போல் காட்சி இருக்கும். காலை, மாலை வேலைகளில் பெருமாள் அவர்களுக்கு மரியாதை செலுத்துவது போல் ஆழ்வார்களுக்கு சடாரி வைக்கப்படும். வைகுண்ட ஏகாதேசி அன்று ராபத்து உற்சவம் துவங்கும். அந்த உற்சவத்திற்கு ஆழ்வார்கள் அவரவர் சன்னிதியில் இருப்பர்.