சேலத்தில் 2வது நாளாக அனுமன் ஜெயந்தி விழா
ADDED :3252 days ago
சேலம்: சேலத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில், இரண்டாவது நாளாக, அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சேலம், பட்டை கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு, நேற்று காலை சிறப்பு பூஜை செய்து, ராஜ அலங்காரம் சாத்தப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், அழகாபுரம் வெங்கடேஷ்வரா ஆசிரமம், ஓமலூர் வீரஆஞ்சநேயர், ராகவாச்சாரியார் ஆசிரமம், காடையாம்பட்டி காரியசித்தி வீரஆஞ்சநேயர், காருவள்ளி வெங்கட்ரமண சுவாமி, கந்தாஸ்ரமம் பஞ்சமுக ஆஞ்சநேயர், நெத்திமேடு கருடாழ்வார் ஆஞ்சநேயர், சூரமங்கலம் பக்த வரப்பிரசாத ஆஞ்சநேயர், கோட்டை சிங்கமுக ஆஞ்சநேயர், சங்ககிரி தபால் ஆஞ்சநேயர், அரியானூர் விஸ்வரூப ஆஞ்சநேயர், வாழப்பாடி சென்றாய பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், நேற்று, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் சாத்தப்பட்டு, பூஜை நடந்தது.