உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வேஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

விஸ்வேஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

குமாரபாளையம்: குமாரபாளையம், காசி விஸ்வேஸ்வரர், காசி விசாலாட்சி அம்மன் கோவிலில், 108 திருவிளக்குபூஜை, அன்னதான விழா நடந்தது. குமாரபாளையம் அடுத்த, அக்ரஹாரம் பகுதியில், காசி விஸ்வேஸ்வரர், காசி விசாலாட்சி அம்மன் கோவிலில், மார்கழி மாத அமாவாசை நாளையொட்டி, 108 திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதான விழா நடந்தது. சாம்பசிவ குருக்கள் தலைமை வகித்தார். இதில், தாய்மார்கள் பெருமளவில் பங்கேற்றனர். காவேரி ஆற்றிலிருந்து, தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. சிறப்பு பஜனையில், பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !